சுவையான பாதாம் முந்திரி கேக் செய்வது எப்படி?





சுவையான பாதாம் முந்திரி கேக் செய்வது எப்படி?

0
பெரும்பாலான இந்திய இனிப்புகள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளில் அவற்றின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய ஒன்றாக இருக்கின்றன முந்திரி பருப்புகள். 
பாதாம் முந்திரி கேக்
பலவிதமான சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கும் முந்திரிகள், இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பிற பகுதிகளிலும் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 

பொதுவாக முந்திரிகளை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும் மற்றும் தினசரி இதை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான பழக்கம் அல்ல என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. 

ஆனால் தினசரி முந்திரி பருப்புகளை அளவோடு சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கிறது. 
முந்திரி மூலம் கிடைக்கும் சக்தி வாய்ந்த நன்மைகளில் ஆரோக்கிய இதயம், வலுவான நரம்பு மற்றும் தசை செயல்பாடு உள்ளிட்ட பல அடங்கும்.

முந்திரியில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவி உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மேலும் முந்திரி ஒப்பீட்டளவில் புரதத்தின் நல்ல ஆதாரமாக உள்ளதால், ​​தினசரி சரியான அளவு இதை சாப்பிடுவது உண்மையில் எடையை குறைக்க உதவுகிறது. 

ரத்த சர்க்கரை அளவு, இதய நிலைமை, எடை இழப்பு மற்றும் பலவற்றில் முந்திரி நன்மைகளை தருகிறது. முந்திரியின் ஆரோக்கியத்தை முழுமையாக பெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 28.35 கிராம் முந்திரி தான் சாப்பிட வேண்டும். 

அதுவும் அவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பொன்னிறமாக எண்ணெய் இல்லாமல் வறுத்து சாப்பிட வேண்டும்.
தேவையானவை:

பாதாம் பருப்பு – 15,

முந்திரிப் பருப்பு – 20,

சர்க்கரை – 150 கிராம்,

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,

நெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:
பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். 

கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)