புடலங்காய் போட் ஃப்ரை செய்முறை / Pudding Bout Fry Recipe !





புடலங்காய் போட் ஃப்ரை செய்முறை / Pudding Bout Fry Recipe !

தேவையானவை :

சிறிய புடலங் காய் - 2, 

பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளி - 2, 

சின்ன வெங்காயம் - 100 கிராம், 

முட்டைக் கோஸ் - 100 கிராம், 

பிரக்கோலி - 200 கிராம், 

காலிஃப்ளவர் - 200 கிராம், 

பிஞ்சு கோவைக் காய் - 100 கிராம், 

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், 

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய் - தேவைக்கு, 

தேங்காய்த் துருவல் - 100 கிராம், 

இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், 

சீரகம் - 1 டீஸ்பூன், 

மல்லித் தழை - சிறிது.

செய்முறை :  

புடலங்காய் போட் ஃப்ரை

கழுவி சுத்தம் செய்த புடலங் காயின் இரு ஓரங்களை யும் நறுக்கிக் கொள்ளவும். 

அதன் உள்ளே உள்ள விதை களை நீக்கவும். நீளவாக்கில் இரண்டு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். 

மொத்தம் 4 துண்டுகள் வரும். கடாயில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காய த்தை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். 

பின்பு முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிஃப்ளவர், கோவைக் காயை போட்டு வதக்கி,

சீரகம், தேங்காய்த் துருவல், தக்காளி, உப்பு, மிளகுத் தூள், மிளகாய்த் தூளைச் சேர்த்து வதக்கவும். 

சிறிது தண்ணீர் ஊற்றி அப்படியே குக்கருக்கு மாற்றி 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். 

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து காய்கறிகளை வறுத்து, நறுக்கிய புடலங் காயின் மேல் வதக்கிய காய்கறி கலவையை வைத்து நன்கு பரப்பி விடவும். 

அகலமான கடாயில் தேவையான எண்ணெய் சேர்த்து போட் போலிரு க்கும் புடலங் காயைப் வைத்து 

காய் கலவை வெளியே வராமல் ஷெலோ ப்ரை செய்யவும். 

நறுக்கிய மல்லித் தழையைத் தூவி காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும்.
Tags: