தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?





தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?

தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப் படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம்.இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். 
தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?
இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேவரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. 

கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருள்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.
இதயம் சீராக செயல்பட வைட்டமின் பி 1 அவசியம். இவை தசை மற்றும் நரம்புகளுக்கு இடையில் செய்தியை பரிமாற்ற உதவுவதோடு இதயத்தின் செயல்பாடுகளையும் பாதுகாக்கிறது. 

இந்த பி வைட்டமின் குறையும் போது இதயத்தின் செயல்பாட்டில் குறைபாடு நேர்கிறது. சரி இனி தினை மாவு பயன்படுத்தி டேஸ்டியான தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை: 

தினை மாவு - 35 கிராம் 

கோதுமை மாவு - 35 கிராம் 

உப்பில்லாத வெண்ணெய் - 30 கிராம் 

சர்க்கரை - 60 கிராம் 

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன் 

உப்புத் தண்ணீர் - 1 டீஸ்பூன் 

(ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்) 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் 

முட்டை - 1 

செய்முறை: 

தினையை 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். 

தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக்
இதனை வாணலி யில் சேர்த்து ஈரம் போக லேசாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இனி, தினைமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து சலித்து வைக்கவும். 

ஒரு பாத்திர த்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். 

பிறகு முட்டை சேர்த்து ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இத்துடன் உப்புத் தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி சலித்த மாவை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும். 
பின்னர் வெனிலா மற்றும் பைனாப்பிள் எசன்ஸை இதனுடன் ஊற்றி விடவும். கலவை தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். 
எல்லா வற்றையும் ரெடி செய்தவுடன், கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணைத் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். 

அதன் மேல் கேக் மாவைக் சமமாக ஊற்ற வேண்டும். இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் க்ரீம் தடவி அழகு படுத்த வேண்டும்.
Tags: