கஸ்டார்ட் பவுடர் ஐஸ் க்ரீம் செய்முறை | Custard Powder Ice Cream Recipe !





கஸ்டார்ட் பவுடர் ஐஸ் க்ரீம் செய்முறை | Custard Powder Ice Cream Recipe !

தேவையானவை :

காய்ச்சிய பால் - 2 கப் மற்றும் 1/4 கப்

சர்க்கரை - 1/2 கப்

வெண்ணிலா கஸ்டார்ட் பவுடர் - 2 டீஸ்பூன்

ஃப்ரஸ் கிரீம் - 4 தேக்கரண்டி

செய்முறை : 

கஸ்டார்ட் பவுடர் ஐஸ்க்ரீம்

முதலில் 1/4 கப் பாலில் கஸ்டார்ட் பவுடர் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திர த்தில் பால் எடுத்து காய்ச்சி சர்க்கரை சேர்த்து கிளறவும். 

இப்போது கஸ்டார்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.

கஸ்டார்ட் கெட்டி யான பின் அடுப்பை அணைக்கவும். சூடாறிய பின் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். 

ஒரு பாத்திரத்தில் அவற்றை எடுத்து ஃப்ரிட்ஜில் 2-3 மணி நேரம் வைக்கவும்.

பின்னர் அவற்றை ஜாரில் எடுத்து நைசாக மசித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

இதே போல் 4 முதல் 5 முறை செய்யவும். கடைசியாக 6-8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
Tags: