சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை செய்முறை | Chilli Carlick Fish Fry Recipe !





சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை செய்முறை | Chilli Carlick Fish Fry Recipe !

தேவையான பொருட்கள் ; 

மீன் - 600 கிராம் 

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் 

ரெட் சில்லி - 6-8 

பூண்டு - 10 பல் 

வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் 

சோயா சாஸ்- 1 டீஸ்பூன் 

கார்ன் ஃப்லோர் - 2 டேபிள் ஸ்பூன் 

ரெட் க்லர் - பின்ச் உப்பு - தேவைக்கு 

செய்முறை :

சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை

மீனை இப்படி சுத்தம் செய்து கட் செய்து கழுவி நீர் வடிகட்டி வைக்கவும். காய்ந்த ரெட் சில்லி, பூண்டு வினிகர் சேர்த்து அரைத்து எடுக்கவும், 

சில்லி ப்ளேக்ஸ் இருந்தால் அதுவும் பூண்டு, வினிகர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். 

மீனோடு உப்பு,அரைத்த சில்லி பூண்டு விழுது, சோயா சாஸ், ரெட் கலர், கார்ன் ப்லோர், உப்பு சேர்க்கவும். 

நன்கு இவ்வாறு மிக்ஸ் செய்து வைக்கவும். பின்பு அதனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் வைத்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

பின்பு ஒரு பேனில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை போட்டு பொரிக்கவும். 

இப்படி சிவந்ததும் திருப்பி போட்டு மீண்டும் சிவற பொரித்து எடுக்கவும். சுவையான பூண்டு 

மணத்துடன் கூடிய சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை ரெடி.கிட்ட தட்ட தாய் ஃபிஷ் ஃப்ரை மாதிரி தான் இருக்கும்,

இது போல் ப்ரான் செய்தால் அசத்த லாக இருக்கும்.விரும்பி னால் மீதியான எண்ணெயை மீன் குழம்பு செய்ய பயன்படுத்த லாம்.
Tags: