சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்முறை / Sugar Beet Chips Recipe !





சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்முறை / Sugar Beet Chips Recipe !

குழந்தை களுக்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிப்ஸை வீட்டிலேயே செய்வது ஆரோக்கிய மானது. 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ்

இன்று சர்க்கரை வள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - கால் கிலோ, 

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 

செய்முறை : 

சர்க்கரை வள்ளிக் கிழங்கை மண் போக நன்கு கழுவி தோல் சீவவும். பிறகு ஓரங்களை நீக்கி விட்டு 

மீண்டும் கழுவி சிப்ஸ் போல சீவி சுத்தமான வெள்ளைத் துணியில் பரத்தவும். 

வாணலியில் எண்ணெய் காய விட்டு சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக சீவிய சிப்ஸ்களை போட்டு கருகாமல் பொன்னிற மாக பொரித் தெடுக்கவும். 

எடுத்த சிப்ஸை ஒரு பாத்திர த்தில் போட்டு இதன் மீது உப்பு,   மிளகாய்த் தூள் தூவி நன்றாக குலுக்கி 

காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பத்து நாட்கள் வரை வைத்தி ருந்து சுவைக்க லாம்.
Tags: