ஸ்ப்ரௌட்ஸ் பனீர் டிக்கி செய்முறை / Sprouts Paneer Tikki Recipe !





ஸ்ப்ரௌட்ஸ் பனீர் டிக்கி செய்முறை / Sprouts Paneer Tikki Recipe !

தேவையான பொருட்கள்

முளைக் கட்டிய பச்சைப் பயறு (வேக வைத்தது) – 100 கிராம்,

ஃப்ரெஷ் பனீர் – 50 கிராம்,

வேக வைத்த உருளைக் கிழங்கு – 50 கிராம்,

வேக வைத்த பச்சைப் பட்டாணி – 25 கிராம்,

நறுக்கிய வெங்காயம் – ¼ கப்,

நறுக்கிய பச்சை மிளகாய் – சிறிதளவு,

இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு,

கரம் மசாலா – சிறிதளவு,

உப்பு – சிறிதளவு,

எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை

ஸ்ப்ரௌட்ஸ் பனீர் டிக்கி
ஒரு பாத்திரத் தில் வேக வைத்த பச்சைப் பயறு, பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கை ஒன்று சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். 

இந்த மசித்த பொருளில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு சேர்த்து கடைசியாக பனீர் கலந்து 

சிறிய வட்டங் களாகத் தட்டி, சூடான தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தயார் செய்த பனீர் டிக்கியை சுட்டு எடுத்து புதினா டிப்பு உடன் சாப்பிட லாம்.

இதில் எனர்ஜி – 141 Kcal, புரதம் – 9.4 கிராம், மாவுச் சத்து – 21 கிராம், கொழுப்புச் சத்து – 3 கிராம் அளவிலும் அமைந் துள்ளது. 

புரதச் சத்து நிறைந்த பனீர் குழந்தை களின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. 

முளைக் கட்டிய பச்சைப் பயறு, பச்சைப் பட்டாணி யில் உள்ள வைட்டமின் C குழந்தை களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Tags: