முள்ளங்கி இறால் குருமா செய்வது எப்படி? | Radish shrimp gurma recipe !





முள்ளங்கி இறால் குருமா செய்வது எப்படி? | Radish shrimp gurma recipe !

சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங் கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்க லாமே… 

முள்ளங்கி இறால் குருமா

தேவையானவை 

இறால் – 1/2 கிலோ 

முள்ளங்கி – 1/4 கிலோ 

வெங்காயம் – 200 கிராம் 

தக்காளி – 200 கிராம் 

தேங்காய் துருவல் – 1/4 மூடி 

பட்டை – 2 

லவங்கம் – 2 

இஞ்சி – சிறு துண்டு 

பூண்டு – 4 பல் 

தயிர் – 1/2 கப் 

பச்சை மிளகாய் – 4 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி 

செய்முறை 
* இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும். 

* வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும். 

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும். 

* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். 
 * பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும். 

* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். 

* முள்ளங்கி யும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.
Tags: