ப்ரோக்கோலி பொரியல் செய்முறை / Lettus Broccoli Roast Recipe !





ப்ரோக்கோலி பொரியல் செய்முறை / Lettus Broccoli Roast Recipe !

ப்ரோக்கோலி யில் அதிகளவு சத்துக்கள் நிறைந் துள்ளது. இன்று ப்ரோக்கோலி பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சாலட் போன்றும் சாப்பிட லாம்.

ப்ரோக்கோலி பொரியல்
தேவையான பொருட்கள் : 

ப்ரோக்கோலி - 1 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் -

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு 

எண்ணெய் - 1 டீஸ்பூன். 

செய்முறை : 

ப்ரோக்கோலி

வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளவும். ப்ரோக் கோலியை சுத்தம் செய்து துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 

வெட்டிய ப்ரோக்கோலி துண்டுகளை ஸ்டீமரில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். 

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

ப்ரோக்கோலி வெங்காயத் துடன் கலந்து லேசாக சூடான வுடன் அடுப்பி லிருந்து இறக்கி பரிமாறவும். ப்ரோக்கோலி பொரியல் ரெடி.
Tags: