எனர்ஜி பேக்டு பார் செய்முறை / Energy Packed Bar !





எனர்ஜி பேக்டு பார் செய்முறை / Energy Packed Bar !

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்,

பாதாம் கொட்டை – 100 கிராம்,

பிஸ்தா கொட்டை – 100 கிராம்,

அக்ரூட் கொட்டை – 100 கிராம்,

விதை யில்லாத பேரீச்சம்பழம் – 50 கிராம்,
அத்திப்பழம் – 50 கிராம்,

தேன் – 2 தேக்கரண்டி.

செய்முறை

எனர்ஜி பேக்டு பார்

சூடான கடாயில் வேர்க் கடலை, பாதம், பிஸ்தா, அக்ரூட் கொட்டை களை நன்கு வறுத்து உலர்ந்த பிறகு, மிக்ஸ் ஜாரில் பொடித்துக் கொள்ள வேண்டும். 

அதன் பிறகு பேரீச்சம் பழம் மற்றும் அத்திப்பழம் சேர்த்து 2 நிமிடங்கள் அரைக்கவும். 

இந்தக் கலவையை ஒரு பாத்திர த்தில் போட்டு அதில் 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும். 

இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு தட்டில் நன்கு அழுத்தி 30 – 45 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். 

அதன் பிறகு அதனை சிறிய துண்டுகளாக குழந்தை களுக்கு கொடுக்கலாம். 
இதை குழந்தை களுக்கு காலை நேரத்தி–்லும் மாலை நேரத்திலும் உணவுக்குப் பின் கொடுக்க லாம்.

இதில் எனர்ஜி – 464 Kcal, புரதம்- 15 கிராம், மாவுச்சத்து – 39 கிராம், கொழுப்புச் சத்து – 37 கிராம் அடங்கி யுள்ளது. 

இதில் உள்ள கொட்டை வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து 

மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் அவை குழந்தை களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
Tags: