பேரீச்சம்பழ கேக் செய்முறை | Date Fruit Cake Recipe !

Subscribe Via Email

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு பேரீச்சம்பழ கேக் செய்து வீட்டில் உள்ளவர் களை அசத்துங்கள். இன்று இந்த கேக் செய்முறையை பார்க்க லாம். 


தேவையான பொருட்கள்: 

பேரீச்சம் பழம் - 25 (விதை நீக்கப் பட்டது ) 

மைதா - 1 கப் 

பால் - 3 /4 கப் 

சர்க்கரை - 3 /4 கப் 

சமையல் சோடா - 1 தேக்கரண்டி 

எண்ணெய் - 1 /2 கப் 

அக்ரூட், முந்திரி - தேவையான அளவு. 

செய்முறை : 

பேரீச்சம் பழத்தை விதை நீக்கி விட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும் பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் 

அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டை யும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும். 

இறுதி யாக அக்ரூட், முந்திரி ஆகிய வற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். 

பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும். மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும். 

பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 - 40 நிமிடங் களுக்கு பேக் செய்யவும் சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.
பேரீச்சம்பழ கேக் செய்முறை | Date Fruit Cake Recipe ! பேரீச்சம்பழ கேக் செய்முறை | Date Fruit Cake Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on March 28, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close