கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை | Chrispy Chilly Chicken Recipe !





கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை | Chrispy Chilly Chicken Recipe !

நம்மில் பல பேருக்கு அசைவம் இல்லாமல் உணவே இறங்காது. அதிலும் சிக்கன் என்றால் சிலர் உயிரையே விடுவார்கள்.

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்
ஆனால் தினமும் ஒரே மாதிரியான அசைவ உணவு என்பது அலுத்து விடும்.

அதனால் கொஞ்சம் வெரைட்டி யான சிக்கன் உணவு சாப்பிட விரும்பு வர்கள் இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் கண்டிப்பாக சுவைத்து ஆகவே வேண்டும்.

நாக்கு ஊறும் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்க லாம்.

தேவையான பொருட்கள்.!

சிக்கன் - 1 கிலோ,

மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

மிளகு தூள் - 1 தேக்கரண்டி,

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,

பச்சை மிளகாய் – 2,

காய்ந்த மிளகாய் – 4,

எலுமிச்சை - அரை மூடி,

கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பி னால்),

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

கருவேப்பிலை - 2

ஆர்க்கு, உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை;
காய்ந்த மிளகாயை யும், பச்சை மிளகாயை யும் மிக்சியில் தனித்தனி யாக இடித்து கொள்ளவும்.

சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளை யும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது,

எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் தேவை க்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங் களை போட்டு பொரித் தெடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.

இப்போ கிரிஸ்பி மிளகாய் சிக்கனை நீங்கள் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையில் உங்களையே மறந்து விடுவீர்கள்.

சாதம் மட்டு மில்லாமல், அனைத்து டிஃபன் வகைகளு க்கும் இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் பர்ஃபெக்ட் சைட்டிஷ் ஆக இருக்கும்
Tags: