முந்திரி பக்கோடா செய்முறை / Cashew Pakoda Recipe !





முந்திரி பக்கோடா செய்முறை / Cashew Pakoda Recipe !

மழை சும்மா ஜம்முன்னு பெய்ஞ்சிட்டு இருக்கும் போது, சூடா மொறுமொறுனு முந்திரி பக்கோடா சாப்பிட்டா எப்படி இருக்கும்.? 

முந்திரி பக்கோடா

கேட்கும் போதே சாப்பிடனும் போல தோனுமே.! குளுகுளு மழைக்கு பர்ஃபெக்டான மொறு மொறு முந்திரி பக்கோட எப்படி செய்யலானு தெரிஞ்சுக் கலாம். வாங்க.! 

தேவையான பொருட்கள்: 

முந்திரிப் பருப்பு – ஒரு கப் 

கடலை மாவு – ஒரு கப் அரிசி 

மாவு – ஒரு கப் 

நெய் – ஒரு டீஸ்பூன் 

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன் 

கொத்த மல்லி தழை – சிறிதளவு 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – தேவைகேற்ப 

செய்முறை 

அகலமான பாத்திரத் தில் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி பருப்பு, மிளகாய் தூள், உப்பு, நெய், ஆகிய வற்றை 

ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்து கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உதிரியாய் போட்டு மொறு மொறுப்பாக வரும் வரை வேக வைத்து 

எடுத்தால் சூடான சுவையான முந்திரி பக்கோடா ரெடி.! மறக்காம உங்க வீட்லயும் டிரை பண்ணி பாருங்க.!
Tags: