சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி?





சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி?

பிரட் உப்மா என்பது எளிதான ஸ்நாக்ஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். இதை நீங்கள் ஒரு சில நிமிடங்களில் செய்யலாம். 
சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி?
ஆனால் சுவை அட்டகாசமாக இருக்கும்! இப்போது இந்த சுவையான பிரட் உப்புமா எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த செய்முறையானது வீணடிக்கப்படக்கூடிய மீதமுள்ள ரொட்டி துண்டுகளுக்கு ஏற்றது. 

சிறந்த அம்சம் என்னவென்றால், காய்கறிகளுடன் உங்கள் சொந்த விருப்பப்படி இந்த செய்முறையை நீங்கள் மேம்படுத்தலாம் மற்றும் அதை மேலும் நிரப்பவும் சத்தானதாகவும் மாற்றலாம். 

பிரட் காய்ந்து போய் விட்டாலோ, அல்லது பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டாலோ, சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். 
தேவையான பொருட்கள்: 

ரொட்டித் துண்டுகள் - 8 பெரிய 

தக்காளி - 1 

பெரிய வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 4 

இஞ்சி - ஒரு சிறு துண்டு 

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 

நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன் 

உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு 

ஹைவேஸ் பெயர் வந்தது எப்படி?

செய்முறை: 
சுவையான பிரட் உப்புமா செய்வது எப்படி?
ரொட்டித் துண்டு களின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கி விட்டு, சிறு சதுரத் துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

சூரிய கிரகணம் ஏன் வருது தெரியுமா?

ஒரு வாணலி யில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்த வுடன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். 

பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியப் பின், தக்காளித் துண்டு களைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். 

அத்துடன் ரொட்டித் துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். 

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்த.. ஸ்டீவ் ஜாப்ஸ் !

பின் அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லா வற்றையும் நன்றாகக் கிளறி விடவும். 
மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப் பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, 

கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
Tags: