வெஜிடபிள் மசாலா செய்முறை / Vegetable Mashed Recipe !





வெஜிடபிள் மசாலா செய்முறை / Vegetable Mashed Recipe !

சப்பாத்தி, பூரி, தோசை, நாண், சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்க லாம். 

வெஜிடபிள் மசாலா
தேவையான பொருட்கள்: 

கேரட் - 2 

உருளைக் கிழங்கு - பெரியது 

பச்சைப் பட்டாணி - 100 கிராம் 

பீன்ஸ் - 100 கிராம் 

முட்டைக்கோஸ் - 100 கிராம் 

காலி ப்ளவர் - 100 கிராம் 

பெரிய வெங்காயம் - 1 

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்  

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்  

தனியாத் தூள் - 3 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவை யான அளவு 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய் - தாளிக்கத் தேவை யான அளவு. 

செய்முறை : 

வெங்காயம், பீன்ஸ், கோஸ், காலிப் பிளவர், உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்த பின்னர் வெங்காய த்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். 

அடுத்து நறுக்கி வைத்துள்ள காய் கறிகளை சேர்த்து வதக்கவும். 

அடுத்து அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள்,  மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு குக்கரை மூடி விசில் போடவும். 

வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேக வைக்கவும். 

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாற வும்.
Tags: