மரவள்ளி கிழங்கு தோசை செய்முறை | Tapioca Dosa Recipe !





மரவள்ளி கிழங்கு தோசை செய்முறை | Tapioca Dosa Recipe !

மரவள்ளி கிழங்கில் அதிகளவு சத்துக்கள் நிறைந் துள்ளது. இன்று மரவள்ளி கிழங்கை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மரவள்ளி கிழங்கு தோசை

தேவையான பொருட்கள் : 

மரவள்ளி கிழங்கு - 250 கிராம் 

பச்சரிசி - 250 கிராம் 

வெந்தயம் - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய் - 3 

செய்முறை : 

பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும. 

அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். 

மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதிக நேரம் புளிக்க வைக்க தேவை யில்லை. 

2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம். தோசை மாவு நீர்க்க வைத்துக் கொள்ளவும். 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த் தெடுக்கவும். 

விருப்பத்திற் கேற்ப எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சூப்பரான மரவள்ளி கிழங்கு தோசை ரெடி.
Tags: