அருமையான சோயா பிரியாணி செய்வது எப்படி?





அருமையான சோயா பிரியாணி செய்வது எப்படி?

சைவ உணவுப் பிரியர்களே உங்களுக்கு  புரதச்சத்து அதிகம் கிடைக்க சோயா சிறந்த உணவு பொருளாகவும். அதிக புரோட்டின் இருப்பதால், சிக்கன் போன்ற அசைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக விளங்குகிறது. 
அருமையான சோயா பிரியாணி செய்வது எப்படி?
சோயா துண்டில் கோழியின் மார்பகத்தில் உள்ள புரதத்திற்கு சமமான அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற நினைப்பவர்களுக்கும் சோயா சிறப்பான மாற்று உணவாகும்.  

சோயாவில் புரதம் மட்டுமின்று, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.  
சோயா துண்டுகளில் காணப்படும் ஐசோஃ ப்ளேவோன்ஸ், ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன், ஹாட் ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள் போன்ற மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதில் சோயா உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.    

மேலும், இரவு  வியர்வை மற்றும் சோர்வு போன்ற பிற மாதவிடாய் அறிகுறிககளை குறைப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,

சோயா உருண்டைகள் – 15,

பெரிய வெங்காயம் – 3,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 1,

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்,

புதினா – அரை கட்டு,

கொத்த மல்லித் தழை – கால் கட்டு,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,

சற்று புளிப்பான தயிர் – கால் கப்,

எலுமிச்சம் பழம் – 1 மூடி,

பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

செய்முறை: 

சோயா பிரியாணி செய்முறை
அரிசியை கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். சோயாவை கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் இரு முறை அலசி எடுங்கள்.

வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்குங்கள். மிளகாயை கீறி வையுங்கள். புதினா, கொத்த மல்லியை சுத்தம் செய்து வையுங்கள்.

குக்கரில் நெய், எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின்னர் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
பிறகு தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேருங்கள். தயிர் நன்கு கொதித்து எண்ணெய் கசிந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீ ருடன் சேருங்கள்.

தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள்
Tags: