உருளைக் கிழங்கு மட்டன் மசாலா செய்முறை / Potato Mutton Masala Recipe !





உருளைக் கிழங்கு மட்டன் மசாலா செய்முறை / Potato Mutton Masala Recipe !

தேவையான பொருட்கள் : 

மட்டன் – 500 கிராம் 

உருளைக் கிழங்கு – 2 சிறியது 

வெங்காயம் – 1 பெரியது 

தக்காளி – 3 

இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய் – 1 

சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பி னால்) 

பட்டை – சிறிய துண்டு 

கொத்த மல்லி – சிறிதளவு 

எண்ணெய் – தேவையான அளவு 

உப்பு – சுவைக் கேற்ப 

தண்ணீர் – தேவைக் கேற்ப 

செய்முறை : 

உருளைக் கிழங்கு மட்டன் மசாலா
* மட்டனை துண்டு களாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும். உருளைக் கிழங்கை சிறு துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 
>
 * வெங்காயம், தக்காளி, கொத்த மல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். 

* பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, உருளைக் கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். 

அவற்றை குக்கரில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும். 

* அடுத்து குக்கரில் பட்டை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கிய பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

* இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி 5 நிமிட ங்கள் வதக்கவும். 

 * அடுத்து அதில் மட்டன் துண்டுகளை உப்புடன் சேர்த்துக் 5 நிமிடங்கள் கிளறவும். 

* குக்கரை மூடி 3 விசில் வைத்த பின் அடுப்பின் தீயை குறைத்து 15 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். 

* பிரஷர் அடங்கிய வுடன் மூடியைத் திறந்து மிதமான சூட்டில் குழம்பு கெட்டி யாகும் வரை கொதிக்க விடவும். 

* திக்கான பதம் வந்ததும் கொத்த மல்லி இலை தூவி இறக்கவும். 

* சுவையான உருளைக் கிழங்கு மட்டன் மசாலா ரெடி.
Tags: