உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? | Potato Cutlet Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
குழந்தை களுக்கு உருளைக் கிழங்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தை களுக்கு விருப்பமான உருளைக் கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 


சோள மாவு – ஒரு கப், 

ரஸ்க் தூள் – 6 டேபிள் ஸ்பூன், 

உருளைக் கிழங்கு – 200 கிராம், 

கேரட் – 1 

பச்சை மிளகாய் – 3 டேபிள் ஸ்பூன், 

கொத்த மல்லித் தழை – 2 சிறிதளவு 

பெரிய வெங்காயம் – ஒன்று, 

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன். 

உப்பு, எண்ணெய் – தேவை யான அளவு, 

செய்முறை: 

* ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* கேரட்டை துருவிக் கொள்ளவும். 

* சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ள வும். 

* உருளைக் கிழங்கை மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும். 

* வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, 

வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்த மல்லித் தழை சேர்த்து இறக்கவும். 

* உருளைக் கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும். 

* வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய விடவும். 

* உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவை யில் தோய்த்து, 

ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

 * சூப்பரான உருளைக் கிழங்கு கட்லெட் ரெடி.
உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? | Potato Cutlet Recipe ! உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? | Potato Cutlet Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚