மட்டன் பக்கோடா செய்முறை / Mutton Pukoda Recipe !





மட்டன் பக்கோடா செய்முறை / Mutton Pukoda Recipe !

வீட்டிற்கு திடீரென விருந்தி னர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். 

மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள்

மட்டன் - 200 கிராம்

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

மிளகாய் தூள் - தேவைக்கு

ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :

மட்டனை சிறிய துண்டு களாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 

நன்கு வதக்கி,1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 6 விசில் போட்டு வேக விடவும். இதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. கறியில் இருக்கும் தண்ணீரே போது மானது.

கறி வெந்தவுடன் அதில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.

வெந்த மட்டனை ஒரு ஒரு பாத்திர த்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். 

தேவையென்றால் மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டனை அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரியாக போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

குறிப்பு : 

அசைவ சமையல் மட்டன் பக்கோடா செய்ய எப்போதும் தீயை குறைவாக இருப்பது நல்லது..
Tags: