சுவையான கோவா கேரட் அல்வா செய்வது எப்படி?





சுவையான கோவா கேரட் அல்வா செய்வது எப்படி?

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
சுவையான கோவா கேரட் அல்வா செய்வது எப்படி?
அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 

அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது. 

கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இந்த வைட்டமின் தவிர கண்களுக்கு கேரட் பல நன்மைகளை வழங்குகிறது. 

குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-யில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது. இது தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. 

கேரட் ஹல்வா உலகம் முழுவதும் பிரபலமான ரெசிபிகளில் ஒன்றாகும். இணையத்தில் அதிகம் தேடப்படும் இந்திய இனிப்புகளில் இதுவும் ஒன்று.

தேவையானவை  :

துருவிய கேரட்- 250 கிராம், 

கோவா – 50 கிராம், 

சர்க்கரை – அரை கப், 

கன்டைன்ஸ்டு மில்க் – அரை கப், 

நெய் – அரை கப், 

முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் – தேவைக் கேற்ப, 

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

செய்முறை  : .  

வாணலியில் நெய் விட்டு, மிதமான சூட்டில், கேரட்டை, அடர் ஆரஞ்சாக மாறும் வரை வதக்கவும். இதில் பால் சேர்த்து, பால் பாதியளவு வரும் வரை கிளறவும். 

இந்த நிலையில், சர்க்கரை, கோவா சேர்த்து, அல்வா பதம் வரும் வரை, தொடர்ந்து, கிளற வேண்டும். ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி சேர்த்து, ஆற வைக்கவும். இந்த நிலையில் சாப்பிடலாம். 

கேரட் அல்வாவை வேறு ஒரு ருசியில் சாப்பிட விரும்பினால், ஸ்பிரிங் ரோல் தாளை, சிறு துண்டுகளாக வெட்டி, அதன் ஒரு மூலையில், கேரட் அல்வாவை ஒரு டீ ஸ்பூன் வைத்து, சிவக்க பொரித்தெடுத்து, குல்கந்த் ரசமலாயில் தொட்டு சூடாகவும் சாப்பிடலாம்.
Tags: