இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை / Ginger - Gooseberry Pickle recipe !





இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை / Ginger - Gooseberry Pickle recipe !

இஞ்சி - நெல்லிக்காய் பித்தம் ஏற்படு வதை தடுப்பதோடு, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய்

செரிமான த்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக் காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப் படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும் போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப் படுகின்றது. 

தேவையானவை: 

இஞ்சி, நெல்லிக் காய் – தலா 100 கிராம் 

பூண்டு – 50 கிராம் 

வெல்லம் – சிறிது 

பெருங்காயத் தூள் – 1/2 மேசைக் கரண்டி 

மிளகாய்த் தூள் – 3 மேசைக் கரண்டி 

மஞ்சள் தூள் – 2 மேசைக் கரண்டி 
வெந்தயம் – வறுத்துப் பொடித்தது 

நல்லெண்ணெய் – 2 மேசைக் கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேக வைத்து கொள்ள வேண்டும். 

மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம், பெருங்காயத் தூள் தாளித்து, எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
Tags: