சுவையான மீன் கபாப் செய்வது எப்படி?





சுவையான மீன் கபாப் செய்வது எப்படி?

மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. 
சுவையான மீன் கபாப் செய்வது எப்படி?
மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான அருமையான மீன் கபாப் செய்வது எப்படி? என்று பார்க்கலாம். 
தேவையான பொருட்கள் :

துண்டு மீன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

வினிகர் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
சுவையான மீன் கபாப் செய்வது எப்படி?
வெங்காயம் தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

பின்பு அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோளமாவு, வெங்காய பேஸ்ட், உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, 
அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்ப தற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீன் கபாப் ரெடி!!! சூப்பரான மீன் கபாப் ரெடி.
Tags: