கறி ஊறுகாய் செய்முறை / Curry Pickle Recipe !





கறி ஊறுகாய் செய்முறை / Curry Pickle Recipe !

தேவையானவை  :

1 1/4 கிலோ எலும்பு இல்லாத கறியைச் சுத்தம் செய்து சிறுத் துண்டு களாக்கிக் கொள்ளவும். 

கறி ஊறுகாய்

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ, 

இஞ்சி - 1/4 கிலோ, 

பூண்டு - 60 கிராம்,  

கிராம்பு - 15 கிராம்,  

சிரகம் - 15 கிராம், 

ஏலக்காய் - 15 கிராம், 

உப்பு - 60 கிராம்,  

சிகப்பு மிளகாய் - 30 கிராம்,  

ஜாதி பத்திரி - 1/4 தேக்கரண்டி, 

ஜாதிக்காய் - 1/4 தேக்கரண்டி

செய்முறை  : 
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு,  கிராம்பு,  சிரகம், ஏலக்காய், உப்பு,  சிகப்பு மிளகாய்,  ஜாதி பத்திரி, ஜாதிக்காய் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 

வாணலி யில் 2 கப் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்து, 

அரைத்த மசாலா பொருட்கள் அனை த்தையும் இத்துடன் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும். 

அடி கனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துண்டு களாக்கியக் கறியைப் போடவும். 

அது விடும் தண்ணீரி லேயே கறியை கிளறி, தண்ணீர் நன்றாக வற்றியப் பின் இறக்கவும். 

வதக்கி வைத்துள்ள மசாலா வுடன் இக்கறித் துண்டுகளைப் போட்டு, 1 கப் வினிகரை ஊற்றி, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும். 

பின், மீண்டும் 1/2 கப் வினிகர் ஊற்றி, இத்துடன் மாங்காய் பௌடர் 30 கிராம் சேர்த்து நன்கு கிளறவும். 

ஆறிய பின் சுத்தமான பாட்டில்களில் அடைத்து, மூடி வைத்து ஏழு நாட்களு க்குப் பின் உபயோகி க்கவும்.
Tags: