சாக்கோ ஆல்மண்ட் ரோல் செய்வது எப்படி?





சாக்கோ ஆல்மண்ட் ரோல் செய்வது எப்படி?

பாதாம் சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல வகையான உயர் அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. 
சாக்கோ ஆல்மண்ட் ரோல்
இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் உள்ளன. வெறும் பாதாம் பருப்பை சாப்பிடுவதை விட, ஊறவைத்த பாதாம் இன்னும் சத்துக்கள் அதிகமானவை. 

காரணம், இது ஜீரணிக்க மிகவும் எளிதானது.. செரிமானமும் எளிதாகிறது. ஊற வைக்கும் போது நன்மைகள் பெருகுகின்றன. 

சில ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கக்கூடிய அசுத்தங்களும் இதனால், நீங்குகின்றன. இந்த ஊற வைத்த பாதாம்கள் தான், மார்பக புற்று நோயின் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க காரணமாக இருக்கின்றன.
தினமும் இரவில் 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை வெது வெதுப்பான தண்ணீ­ரில் ஊற வைத்து, காலையில் அந்த பருப்புகளின் மீதுள்ள தோலை நீக்கிவிட்டு, அரைத்து சாப்பிட வேண்டும். 
இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாட்களும், எடை குறைக்க நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறையும் 5 பாதாம் பருப்புகளை எடுத்து கொள்ளலாம். அதிக பாதாம் சாப்பிடக் கூடாது.. அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும்.

தேவையானவை: 

இனிப்பு பிஸ்கட் – 10 

உப்பு இல்லாத வெண்ணெய் – அரை கப் 

சர்க்கரை – அரை கப் 

பால் – 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு – ஒரு சிட்டிகை 

வெனிலா எசன்ஸ் – 3 சொட்டு 

பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் 

கோக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் 

துருவிய தேங்காய் – தேவையான அளவு 

சாக்லேட் சாஸ் – தேவையான அளவு 

செய்முறை: 
பிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். அடுப்பில் வாண லியை வைத்து வெண்ணெய் சேர்த்து 

பாதியளவு க்கு உருகியதும் சர்க்கரை, பால், கோக்கோ பவுடர், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து சாஸ் பதத்துக்கு கிளறவும். 
சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !
இனி அடுப்பில் இருந்து இறக்கி, பிஸ்கட் கலவையில் சேர்த்து விரல் நீளத்துக்கு படத்தில் காட்டி யுள்ளது போல வடிவமாக்கி கொள்ளவும். 

அப்படியே பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் தேங்காய்த் துருவல் மேல் புரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் ரெண்டு மணி நேரம் வைக்க வேண்டும். 

பிறகு வெளியே எடுத்து சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.
Tags: