மட்டன் கறி செய்வது எப்படி? | Mutton Curry Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
உங்கள் சுவையை தூண்டும் மட்டன் கறி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மட்டன் கறி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க! 

மட்டன் கறி செய்வது

தேவையானவை :

பூண்டு – 5 -8 பல் 

இஞ்சி – 1 துண்டு 

மட்டன் – 1 கிலோ 

சின்ன வெங்காயம் – 100 கிராம் 

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி – 2 (வெட்டியது) 

பட்டை – 2 

கிராம்பு – 2 

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி 

மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி 

சீரகம் – 1 /2 தேக்கரண்டி 

சோம்பு – 1 /2 தேக்கரண்டி 

மிளகு – 1 /4 தேக்கரண்டி 

கடுகு – 1 /2 தேக்கரண்டி உணவு 

செய்முறை : 

மட்டன் கறி முதலில் மட்டனை கழுவி, நடுத்தர மான துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். பின் சின்ன வெங்காயம், இஞ்சி, 

பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் தூள் அனைத் தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

பிறகு அரைத்த மசாலாவை மட்டன் துண்டுகள் மீது தடவி, 30 நிமிடங்கள் வைக்கவும். 

பின்பு குக்கரில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். 

 பின் மசாலா தடவி வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும். 

கடையில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். 

பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மாசியும் வரை வதக்கவும். 

வேக வைத்துள்ள மட்டன் துண்டு களைச் சேர்த்து , எண்ணெய் பிரியும் வதக்கி இறக்கவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚