மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு செய்முறை / Yellow Pumpkin & Peanut Salad Recipe !





மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு செய்முறை / Yellow Pumpkin & Peanut Salad Recipe !

தேவையானவை:

மஞ்சள் பூசணி -  1/4 கீற்று

வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (தோல் நீக்கியது)

காய்ந்த மிளகாய் - 3

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு

பூசணியை சிறுசிறு துண்டு களாக நறுக்கி,ஒரு கெட்டியானப் பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

மிளகாயை வெறும் வாணலில் போட்டு சூடாகியதும் எடுத்து ஆறியதும் வேர்க் கடலை யுடன் சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

காய் அடிப் பிடிக்காமல் கிண்டி விடவும். காய் வேகும் போதே தண்ணீர் விட்டுக் கொள்ளும்.

நன்றாக வெந்த பிறகு உப்பு சேர்த்துக் கிளறி விடவும். முதலிலேயே உப்பு சேர்த்தால் காயின் அளவைப் பார்த்து நிறைய சேர்த்து விடுவோம். 

இது நீர்க்காய் என்பதால் வெந்த பிறகு அளவு குறைந் திருக்கும். இப்போது பொடித்து வைத் துள்ளப் பொடியைக் காயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு இறக்கவும்.

இதை சாதாரண கூட்டு போலவே சாதத்துடன் சேர்த்து அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிட லாம்.
Tags: