அவரைக்காய் பொரியல் செய்முறை / Purple Beans Poriyal Recipe !





அவரைக்காய் பொரியல் செய்முறை / Purple Beans Poriyal Recipe !

தேவையானவை:

நறுக்கிய அவரைக் காய் - ஒரு கிண்ணம்

உப்பு - தேவைக்கு

பொடிக்க:

வறுத்த‌ வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

அவரைக் காயைக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டு களாக நறுக்கிக் கொள் ளவும். 

அவரைக்காய் பொரியல்
ஒரு அடிகன மான வாணலில் நறுக்கிய அவரைக் காயைப் போட்டு அது திட்டமாக 

வேகு மளவு சிறிது தண்ணீர் விட்டு, சிறிது உப்பு தூவி வேக வைக்கவும்.

தண்ணீர் குறைவாக இருப்ப தால் அடிப்பிடிக்க வாய்ப் புண்டு. எனவே வேகும் போதே இரண்டு தரம் கிளறி விடவும்.

இதற்கிடை யில் மிளகாயை வெறும் வாணலில் சூடுவர வறுத்து ஆறியதும் வேர்க் கடலை யுடன் சேர்த்து மிக்ஸி யில் போட்டு கரகரப் பாகப் பொடித்துக் கொள்ளவும்.

அவரைக் காய் வெந்ததும் (தண்ணீர் இருக்கக் கூடாது, இருந்தால் வடித்து விடவும்) பொடித்த பொடியைப் போட்டுக் கிளறி விட்டு இறக்கவும்.

இதை மற்ற பொரியல் போலவே சாதத் துடன் சேர்த்து சாப்பிட லாம். இம்முறை யிலேயே சாதாரன அவரைக் காயிலும் செய்ய லாம்.
Tags: