அருமையான பூசணி அல்வா செய்வது எப்படி?





அருமையான பூசணி அல்வா செய்வது எப்படி?

பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். 
பூசணி அல்வா
உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது. 

குறிப்பாக ஆண்கள் தங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் அக்கறை செலுத்துவதை முதன்மை நோக்கமாக பின்பற்ற வேண்டும். 

அந்த வகையில் ஆண்களின் ஆரோக்கிய நண்பன் என்று அழைக்கப்படும் பூசணி விதைகளை தினசரி உட்கொள்வதால் பல நன்மைகளை பெற முடியும். இதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம். 

பூசணி விதை பல ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்திய ஜர்னல் ஆஃப் யூரோலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

இது ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது பொதுவாக புரோஸ்டேட் சுரப்பியை வலுப்படுத்தவும், ஆண்களில் ஆரோக்கியமான ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

தேவையானவை  : 

வெள்ளைப் பூசணிச் சாறு (அரைத்து வடி கட்டியது) – 200 மி.லி., 

முந்திரிப் பருப்பு – 50 கிராம், 

வெள்ளரி விதை – 50 கிராம், 

பூசணி விதை – 50 கிராம், 

ஏலக்காய் – 10, 

பனங்கல்கண்டு – தேவைக் கேற்ப, 

நெய் – 1 டீஸ்பூன், 

தேன் – 2 டீஸ்பூன். 

செய்முறை  :  

முந்திரி, வெள்ளரி விதை, பூசணி விதை, ஏலக்காயை தனித் தனியே வறுத்துப் பொடித்து வைக்கவும். பூசணிச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். 

பாதியாகச் சுண்டியதும், அதில் பொடித்து வைத்து ள்ளதைச் சேர்த்து, நெய் விட்டு, பனங் கல்கண்டு சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு நன்கு சுருண்டு வந்ததும், தேன் கலந்து பரிமாறவும். 

கோடைக் கேற்ற இனிப்பு இது. உஷ்ணம் தணிக்கும். வியர்வை கட்டுப்படும். வாய்ப்புண் வராது. பெண்கள் வாரம் இரண்டு முறை இதை எடுத்துக் கொண்டால், வெள்ளைப் போக்கு நிற்கும்.
Tags: