பசலைக்கீரை புலாவ் செய்முறை / Pulau spinach Recipe !





பசலைக்கீரை புலாவ் செய்முறை / Pulau spinach Recipe !

தேவையானவை: 

பாசுமதி அரிசி – ஒரு கப், 

பசலைக் கீரை – ஒரு கட்டு, 

வெங்காயம் – ஒன்று, 

பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துகேற்ப), 

இஞ்சி – சிறு துண்டு, 

பூண்டு – 3 பல், 
சீரகம் – ஒரு டீஸ்பூன், 

பட்டை – சிறு துண்டு, 

பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், 

நெய்யில் வறுத்த முந்திரி – சிறிதளவு, 

எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

பசலைக்கீரை புலாவ்

பசலைக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து 

லேசாக வேக வைத்து மிக்ஸி யில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
பிறகு உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவும். 

நன்கு கொதித் ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைக்கவும்.

பின் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாற வும்.
Tags: