பிடி கொழுக்கட்டை செய்முறை / Pidi Kozhukattai Recipe !





பிடி கொழுக்கட்டை செய்முறை / Pidi Kozhukattai Recipe !

தேவையான பொருள்கள் :

பச்சரிசி - 2 கப்

வெல்லம் - 2 கப்

பச்சைப் பயறு - 1 டேபிள் ஸ்பூன்<

தேங்காய்ப் பல் - 1 டீஸ்பூன் (விருப்ப மானால்)

எள் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 1

செய்முறை:

பச்சைப் பயறை நன்றாக‌ சிவக்க வறுத்து ஊற வைக்கவும். பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.

பிடி கொழுக்கட்டை

பின்பு மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்தெடு க்கவும். ஒரு பாத்திர த்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.

எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும். பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.

தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவ ற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

அடுத்து வெல்ல த்தை ஒரு கனமான பாத்திரத் தில் எடுத்துக் கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பி த்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.

எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக் காய் அளவு எடுத்து உள்ளங்கை யில் வைத்து விரல்க ளால் அழுத்தி மூடவும். 

மேலும் உருண்டை களாகவும் பிடித்துக் கொள்ள லாம்.

இவ்வாறே எல்லா வற்றையும் செய்து கொண்டு இட்லிப் பானை யில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். 

இனிப்பாக வும், வித்தியாச மாகவும் இருப்பதால் குழந்தை கள் விரும்பி சாப்பிடு வார்கள்.
Tags: