ருசியான கோபி பிரியாணி செய்வது எப்படி?





ருசியான கோபி பிரியாணி செய்வது எப்படி?

காலிஃபிளவர் ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகும். மேலும் நீரிழிவு நோயாளிகளின் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ருசியான கோபி பிரியாணி செய்வது எப்படி?
காலிஃபிளவரில் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. 

அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் காலிஃபிளவர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். 

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மதிப்பெண் ஆகும். காலிஃபிளவரின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. 
கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ஒரு ரேட்டிங் அமைப்பாகும், இது ஒரு உணவு எவ்வளவு விரைவாகவும், எவ்வளவு அதிகமாகவும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதை அளவிடுகிறது.

தேவையானவை: 

பாசுமதி அரிசி – 2 கப், 

காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) – ஒன்று, 

பெரிய வெங்காயம் – 2, 

நாட்டுத் தக்காளி – 4, 

இஞ்சி – சிறு துண்டு, 
பூண்டு – 8 பல், 

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், 

பட்டை – சிறு துண்டு, 

லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, 

கொத்த மல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு, 

தனி மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன், 

பச்சை மிளகாய் – 2, நெய், 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை : 

ருசியான கோபி பிரியாணி செய்வது எப்படி?

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து, துண்டு களாக்கவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிய தாக நறுக்கவும். 

தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல், லவங்கம், ஏலக்காய், கொத்த மல்லித் தழை ஆகிய வற்றை மிக்ஸி யில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 
பிறகு, தனி மிளகாய்த் தூள், அரைத்த மசாலா விழுது, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 

நன்றாக கொதித் ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைக்கவும். பின் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்த மல்லித் தழை தூவி பரிமாறவும்.
Tags: