அருமையான நெய் பிரியாணி செய்வது எப்படி?





அருமையான நெய் பிரியாணி செய்வது எப்படி?

உணவில் தினமும் நெய் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவியாக உள்ளது. 
நெய் பிரியாணி
ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகளவில் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறப்படுகிறது.

பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும்.

நெய் பொதுவாக தயிரிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும் போது நெய் உருவாகின்றது தயாரிக்கப் படுகிறது, 
வெண்ணெயை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் நெய் தயாரிக்கப் படுகிறது.

தேவையானவை 

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு,

நெய்யில் வறுத்த முந்திரி – 10.

பெரிய வெங்காயம் – 3,
தேங்காய்ப்பால் – அரை கப்,

பட்டை – சிறு துண்டு,

பிரிஞ்சி இலை – ஒன்று,

லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,

பச்சை மிளகாய் – 5,

புதினா, கொத்த மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,

பாசுமதி அரிசி – 2 கப்,

செய்முறை :

முதலில் பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பின்பு பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்த மல்லித் தழையை மிகவும் பொடியாக நறுக்கவும்.

பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி – பூண்டு விழுது ஆகிய வற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.,
நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்த மல்லித் தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகிய வற்றை ஒவ்வொன்றாக சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் தேங்காய் பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். 

ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.பின்பு பரிமாறவும்
Tags: