கொண்டை கடலை, கீரைப் பொரியல் செய்முறை | Chickpea, Spinach Fry Recipe !





கொண்டை கடலை, கீரைப் பொரியல் செய்முறை | Chickpea, Spinach Fry Recipe !

தேவையானப் பொருள்கள்:

கறுப்பு (அ) வெள்ளை கொண்டைக் கடலை - 3 கைப்பிடி (ஒரு நபரு க்கு ஒரு பிடி)

கீரை - 3 கொத்து (mustard green)

(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டு மானாலும் சேர்த்துக் கொள்ள லாம்.)

சின்ன வெங்காயம் - 3

பூண்டு - 5 பற்கள்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

சீரகம்

பெருஞ்சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

கொண்டை கடலை, கீரைப் பொரியல்

முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும்.இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வெந்ததும் நீரை வடித்து வைக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டை யும் தோலு ரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும். ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி 

சூடேற்றி சீரகம், பெருஞ் சீரகம், பெருங் காயம் கறிவேப் பிலைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

இரண்டும் நன்றாக வதங்கி யதும் கடலையைப் போட்டு வதக்கவும். 

பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.

கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த் தூளும் நன்றாகக் கலந்தி ருக்கும். 

அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

இது எல்லா சாதத்தி ற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவை யாகவும் இருக்கும்.
Tags: