ப்ரஸ்ஸல்ஸ் பொரியல் செய்முறை / Brussels Sprouts recipe !





ப்ரஸ்ஸல்ஸ் பொரியல் செய்முறை / Brussels Sprouts recipe !

தேவையானப் பொருள்கள்: 

ப்ரஸ்ஸல்ஸ் - 5 

சின்ன வெங்காயம் - 3 

பச்சை மிளகாய் - 1 

தேங்காய்ப் பூ - 1/2 டீஸ்பூன் 

கொத்து மல்லி இலை - ஒரு கொத்து 

உப்பு - தேவைக்கு 
தாளிக்க: 

எண்ணெய் கடுகு உளுந்து சீரகம் கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் பெருங் காயம் கறிவேப்பிலை - தேவைக்கு

ப்ரஸ்ஸல்ஸ் பொரியல்

செய்முறை:

ப்ரஸ்ஸல்ஸை கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் பொடியா கவும், பச்சை மிளகாயைக் கீறியும் வைக்கவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந் ததும் தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களைத் தாளித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
அடுத்து ப்ரஸ்ஸல்ஸை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு மூடி போடாமல் கிளறி விடவும்.மூடி போட்டால் அந்த அழகான‌ பச்சை நிறம் மாறி விடும். 

 தீ மிதமாக இருக்கட்டும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.சீக்கிரமே வெந்து விடும். இறுதியில் தேங்காய்ப் பூ,கொத்து மல்லித் தூவிக் கிளறி இறக்கவும். 

குறிப்பு: 

விருப்ப மானால் தேங்காய்ப் பூ சேர்ப்பதற்கு முன் வெந்த துவரம் பருப்பு ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.
Tags: