நெல் மாவு ரொட்டி செய்முறை / Rice flour bread recipe !





நெல் மாவு ரொட்டி செய்முறை / Rice flour bread recipe !

தேவை யான பொருட்கள் ;

வறுத்த அரிசி மாவு - அரை கிலோ

தேங்காய்த் துருவல் - பாதி தேங்காய்

கொதி நீர் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

நெய் எண்ணெய் கலவை - சிறிது

செய்முறை

மாவுடன் தேவைக்கு கொதிக்கும் நீர், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி வைக்கவும்.

நெல் மாவு ரொட்டி

பின்பு மாவை குழைத்து சிறிய உறுண்டை களாக்கவும்.

படத்தில் உள்ள படி ஒரு வளையம் இருந் தால் ரொட்டி தட்டி போட வசதி யாக இருக்கும்.

ஒரு பாலித்தீன் கவரில் எண்ணெய் தடவி வளையம் வைத்து, உருண்டை மாவை வளைய த்திற்குள் வைத்து தட்டி எடுக்கவும்.

தவாவை அடுப்பில் வைத்து சூடேறி யதும் இரண்டு இரண்டாக அல்லது நான்கு நான்காக போட்டு வேக வைக்க வும்.

ஒரு புறம் வெந்ததும் எண்ணெய் நெய் கலவை தடவி திருப்பி போடவும், ரொட்டி வெந்து மணம் வரவும் எடுக்கவும்.

சுவை யான சூடான அரிசி மாவு ரொட்டி ரெடி.இதனை மீன் குழம்பு, கறிக் குழம்பு, மாசி சம்பல், தேங்காய் சட்னி யுடன் பரிமாற லாம்.

அல்வா, சீனி தொட்டும் சாப்பிட லாம்.
Tags: