மட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe !





மட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe !

தேவையான பொருட்கள்:

மட்டன் - 400 கிராம்

ஸ்நோபீஸ்- 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - சிறியது 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கறி மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லி இலை - சிறிது

தயிர் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை :

முதலில் மட்டன் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும், எப்பவும், மட்டன் சிக்கன் சமைக்கும் பொழுது

மட்டன் ஸ்நோபீஸ்

நன்கு கழுவி தண்ணீர் வடி கட்டுவது அவசியம். மட்ட னுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர் , சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்த வுடன், நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி,

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

அத்துடன், நறுக்கிய தக்காளி, மல்லி இலை சேர்த்து பிரட்டவும், பின்பு மிளகாய்த் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து மூடவும்.

5 விசில் வைத்து குக்கரை இறக்கவும்.

ஸ்நோபீஸ் நார் எடுத்து தண்ணீரில் கழுவி வடி கட்டவும். குக்கரை ஆவியடங்கி யவுடன் திறக்கவும்.
ஸ்நோபீஸ் சேர்க்கவும். பிரட்டி விட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.வெயிட் போட வேண்டாம் , விரைவில் வெந்து விடும்.

இல்லா விடில் தனியாக சிறிது உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வெந்தும் தட்டலாம்.

இது மட்டனோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். விரும் பினால் சிறிது தேங்காய் அரைத்து விட்டு கிரேவி மாதிரியும் வைக்கலாம்.

சுவை யான மட்டன் ஸ்நோபீஸ் ரெடி. இதனை சப்பாத்தி, சாதத் துடன் பரி மாறலாம்.
Tags: