சுவையான காளிப்ளவர் பக்கோடா செய்வது எப்படி?





சுவையான காளிப்ளவர் பக்கோடா செய்வது எப்படி?

காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுவையான காளிப்ளவர் பக்கோடா செய்வது எப்படி?
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. 

நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் காலிப்ளவர் சிறப்பாக செயல்படுகிறது. 

காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. 

இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து,  இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. 

சரி இனி காளிப்ளவர் கொண்டு சுவையான காளிப்ளவர் பக்கோடா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் ;

காளிப்ளவர் - அரை கிலோ

சிக்கன் 65 மசாலா -1 டேபிள் ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கடலை மாவு - 1கப்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி, கருவேப்பிலை - சிறிதளவு`

ரெட் கலர் - பின்ச்

சோடா உப்பு - பின்ச்

எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் (விரும் பினால்)

எண்ணெய் உப்பு - தேவைக்கு.

செய்முறை:
சுவையான காளிப்ளவர் பக்கோடா செய்வது எப்படி?
காளிப்ளவரை சின்ன சின்ன இதழாக பிரித்து பின்பு (அரை கிலோ இருக்க வேண்டும்) கொதிக்கும் நீரில் போட்டு பாதி வேக்காடு வெந்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.

தண்ணீர் வடி கட்டியதும் காளிப்ளவருடன் சிக்கன் 65 மசாலா சேர்த்து அரை மணி நேர மாவது ஊற வைக்கவும்.

உப்பு மசாலாவில் இருக்கும் தேவைப்பட்டால் சேர்க்கவும். ஊறிய பின்பு கடலை மாவு, அரிசி மாவு, பின்ச் சோடா உப்பு, கலர் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி வைக்கவும், தண்ணீர் தேவைக்கு விரவும் பொழுது தெளிக்கவும். மல்லி கருவேப் பிலை சேர்க்கவும். நன்றாக எல்லாம் கலந்து வைக்கவும்.

கலவை பக்குவமாக கெட்டியாக இருக்க வேண்டும். உப்பு சரி பார்த்து கொள்ளவும். தேவைக்கு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் ரெடி செய்த காளிப்ளவரை போட்டு சிவற பொரித்து எடுக்கவும்.
பொரித்து பேப்பர் டவலில் வைக்கவும் .சூடாக பரிமாறவும். மல்லி கருவேப்பிலை மணத்துடன் சூப்பராக இருக்கும். சுவையான கிரிஸ்பி காளிப்ளவர் பக்கோடா ரெடி.

இதனை ஸ்நாஸாகவும் சாப்பிடலாம். வெரைட்டி ரைஸ்க்கு சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.
Tags: