டேஸ்டியான பால் பொங்கல் செய்வது எப்படி?





டேஸ்டியான பால் பொங்கல் செய்வது எப்படி?

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. 
பால் பொங்கல் செய்முறை
மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது.

புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. 

பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். இரவில் பால் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. 

உங்கள் நிறம் பளிச்சிட வேண்டுமெனில், அழகுசாதனப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, 2 கிளாஸ் பால் குடித்தால் அதிக பலன்கள் கிடைக்கும். 

பால் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும், மென்மையாக்கவும் உதவுகிறது. கால்சியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பதால் , பால் உட்கொள்வது வலுவான பற்களை உறுதிப்படுத்துகிறது. 

மற்றும் ஒரு நபர் பல் மற்றும் துவாரங்களின் சிதைவைத் தடுக்க உதவுகிறது . பாலுடன் வைட்டமின் டியும் உட்கொள்ளப்படுவதைக் கவனிக்க வேண்டும் . வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.

சரி இனி பால் பயன்படுத்தி டேஸ்டியான பால் பொங்கல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

அரிசி - 250 கிராம்,

பால் - ஒரு லிட்டர்,

சர்க்கரை - 500 கிராம்,

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,

வறுத்த முந்திரிப் பருப்பு - 20,

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை,

நெய் - 100 மில்லி.

செய்முறை:

அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.
Tags: