வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்முறை | Ladyfinger curd recipe !





வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்முறை | Ladyfinger curd recipe !

தேவை யான பொருட்கள்: 

வெண்டைக் காய்கள் - 15; 

பச்சை மிளகாய் - 2;

எண்ணெய் - 2 ஸ்பூன்; 

தயிர் - 1 கப்; 

உப்பு - ருசிக் கேற்ப; 

தாளித்து மேலே தூவிக் கலக்க: 

எண்ணெய் - 1 ஸ்பூன்; 

ஜீரகம் - 1/2 டீ ஸ்பூன்; 

கடுகு - 1/2 ஸ்பூன்; 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்; 

காய்ந்த மிளகாய் - 1; 

கறிவேப் பிலை - ஒரு கொத்து. 

செய்முறை : 

வெண்டக் காய் களை பாதிப் பாதியாக நறுக்கிக் கொள்ள வும். பச்சை மிள காயைப் பொடி யாக நறுக்கிக் கொள்ள வும். 

வெண்டைக்காய் தயிர் பச்சடி

ஒரு வாணலி யில் எண்ணெய் விட்டு அரிந்து வைத் துள்ள வெண்டைக் காய் மற்றும் பச்சை மிள காயைப் போட்டு வெண்டைக் காய் முறுகி வதங்கும் வரை வதக் கவும். 

பிறகு தனியாக ஒரு வாண லியில் எண்ணெய் விட்டு ஜீரகம் கடுகு போட்டு பொறிய விட்டு, பின் உளுதம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக் கவும். 

ஒரு வாணலி யில் தயிரை ஊற்றி சூடாக்கி உப்பு, வெண்டைக் காய் சேர்த்துக் கலக்கி தாளித்து வைத் துள்ள பொருட் களைச் சேர்த்தால், வெண்டைக் காய் தயிர் பச்சடி ரெடி.
Tags: