வெல்ல பிடி கொழுக்கட்டை செய்முறை / Jaggery Pudding recipe !





வெல்ல பிடி கொழுக்கட்டை செய்முறை / Jaggery Pudding recipe !

விநாயகர் சதுர்த்தி என் றாலே பெரிய வர்கள் முதல் சிறிய வர்கள் வரை கொண் டாட்டம்  தான் .

வெல்ல பிடி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி அன்றை க்கு சாமியை வணங்கா தவர்கள் கூட அவரு க்கு படைக்கப் பட்ட கொழுக் கட்டையை விரும்பி சாப்பிடு வார்கள் .

கொழுக் கட்டையில் பல வகைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தி யன்று விநாய கருக்கு படைக்க வெல்ல பிடி கொழுக் கட்டையை செய்வது எப்படி என்று பார்க்க லாம்.

தேவை யான பொருட்கள் : 

அரிசி மாவு - 1/2 கப்

வெல்லம் - 1/4 கப்

தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்

துருவிய தேங்காய் - கால் கப்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

எண்ணெய் - சிறிது 

செய்முறை : 

வெல்ல த்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். 

வெல்லம் கரைந் ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திர த்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். 

பாகு நன்கு கொதி க்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். 

பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெது வாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராத வாறு தொடர்ந்து கை விடாமல் கிளறி விட வேண் டும். 

 ஒரு கட்டத் தில் மாவானது பாத்தி ரத்தில் ஒட்டா மல் திரண்டு வரும் வேளை யில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும். 

மாவானது வெது வெதுப் பான நிலை யில் இருக் கும் போது, கைகளில் எண்ணெ யைத் தடவிக் கொண்டு, 

அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக் கட்டை போன்று கைக ளால் பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண் டும். 

பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்தி ரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக் கினால், பிடி கொழுக் கட்டை ரெடி!!!
Tags: