பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை / Piece of bread stahptu !





பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை / Piece of bread stahptu !

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,

பச்சைப் பட்டாணி – ஒரு கப் (வேக வைத்து நீரை வடிக்கவும்), 

கொத்த மல்லித் தழை – அரை கட்டு, 

பச்சை மிளகாய் – 2, 
இஞ்சி – சிறு துண்டு, 

நெய் – எண்ணெய் கலவை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி

கோதுமை மாவுடன் சிறி தளவு உப்பு, தேவை யான நீர் சேர்த்துப் பிசையவும், வேக வைத்த பச்சை பட்டாணி யுடன் கொத்த மல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து. 

சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்யவும். 
அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்தி களாக தேய்க்கவும். 

தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் – எண்ணெய் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும். 

பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.
Tags: