டொமேட்டோ கார்ன் புலாவ் செய்முறை / Tomato corn pulao !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை:

பாசுமதி அரிசி – ஒரு கப்,

வேக வைத்த கார்ன் – அரை கப்,

வெங்காயம் – ஒன்று,

தக்காளி – 3, 

இஞ்சி,  பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,

தேங்காய்ப் பால் – அரை கப்,

பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,

எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

டொமேட்டோ  கார்ன் புலாவ்

வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். 

அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து… 
வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள், புதினா, கொத்த மல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.

இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும். வேக வைத்த கார்னை மேலே தூவி…  பரிமாறவும்.
டொமேட்டோ கார்ன் புலாவ் செய்முறை / Tomato corn pulao ! டொமேட்டோ  கார்ன் புலாவ் செய்முறை / Tomato corn pulao ! Reviewed by Fakrudeen Ali Ahamed on March 08, 2017 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚