கீரை சாட் செய்முறை | Spinach Chad Recipe !





கீரை சாட் செய்முறை | Spinach Chad Recipe !

தேவையானவை:

முருங்கைக் கீரை – ஒரு கட்டு,

உருளைக் கிழங்கு – 4,

வேர்க்கடலை – கால் கப்,

சாட் மசாலா பொடி,

ஸ்வீட் சட்னி – தலா ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,

கொத்த மல்லி,

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை),

கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கீரை சாட்

முருங்கைக் கீரையை சுத்தம் செய்து, ஆய்ந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகள் செய்யவும். வேர்க் கடலையை வறுக்கவும்.

கீரை, உருளைக் கிழங்கை ஒன்று சேர்த்து… வேர்கடலை, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி,

எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து உள்ள தால், அனைத்து வயதினரு க்கும் ஏற்ற சாட் இது!
Tags: