வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?





வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும். 
வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?
ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மைதாவுக்கு மாறியது. 

அதோடு நெய்யையும் விட்டு விட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்கபட்டது. எளிய மக்களின் உணவாக கருதப் படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.

அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை. சரி நீ எல்லா கோடுகளையும் அழி நா முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் என்று புரோட்டா தின்னும் நடிகர் சூரியின் காமெடியை யாரும் மறக்க முடியாது.
பரோட்டாவும் பிரபலமடைந்தது. சரி இனி வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

மைதா மாவு – 2 கப்,

தயிர், பால் – தலா கால் கப்,

சமையல் சோடா – கால் டீஸ்பூன்,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?
மைதா மாவுடன் நெய், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துப் பிசிறி, தயிர், பால் மற்றும் தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊற விடவும். 
ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக, வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி மடித்து சுருட்டவும் (புடவை கொசுவம் போல).

பிறகு, சப்பாத்தி குழவியால் சற்று கனமாகத் தேய்த்து தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். 

இதே போல 4, 5 பரோட்டா க்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் இரண்டு ஓரங்களிலும் சேர்த்துத் தட்டி எடுத்து வைக்கவும். 

வெஜ் குருமா இதற்கு சரியான ஜோடி.
Tags: