சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி?





சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி?

இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி?
எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும் அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். 

இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

இறால்களில் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. 100 கிராம் இறால்களில் 115 கலோரிகள் மட்டுமே உள்ளது. 

எனவே இறால் கலோரி குறைவான காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

சரி இனி இறால் கொண்டு சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : 

இறால் - 1/2 கிலோ 

சாம்பார் வெங்காயம் - 200 கிராம் 

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 

தக்காளி - 1 

பூண்டு - 10 பல் 

பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு) 

கிராம்பு - 5 

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை - 2 கொத்து 

கொத்த மல்லித் தழை - சிறிதளவு 

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி 

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 

மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 

எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி 

உப்பு - தேவையான அளவு 
செய்முறை :

இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி?
சாம்பார் வெங்காய த்தில் பாதியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும். 

தக்களியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு போட்டு சிவக்க வதக்கவும். 

பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கியதும், இறாலைப் போட்டு நன்றாகப் பிரட்டவும். 

இதனுடன் மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும். 
இறால் வெந்து கிரேவி நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது, மிளகு தூள்,

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை சேர்த்து, அடுப்பி லிருந்து இறக்கவும். 

குறிப்பு 

1. இறாலை கழுவும் போது கால் அல்லது அரை எலுமிச்சம் பழ சாற்றை அதனுடன் சேர்த்து கழுவினால் இறால் வாசனை குறைவாக இருக்கும்
Tags: