டேஸ்டியான மிக்ஸ்டு சாட் செய்வது எப்படி?





டேஸ்டியான மிக்ஸ்டு சாட் செய்வது எப்படி?

வேர்க்கடலையைப் பல்வேறு ஊட்டச் சத்துக்களின் தொகுப்பு என்றே சொல்லலாம். அதிலும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அன்றைய நாளுக்கான ஒட்டு மொத்த எனர்ஜியையும் அதிலிருந்து பெற முடியும். 
டேஸ்டியான மிக்ஸ்டு சாட் செய்வது எப்படி?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. 

மிதமான அளவில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். அவல் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட்டுகளின் நல்ல ஆதாரங்களில் ஒன்றாகும், இது உங்களை உற்சாகப்படுத்த உடலுக்குத் தேவைப்படுகிறது. 

இது பரிந்துரைக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டுகளில் சுமார் 76.9% மற்றும் கொழுப்புகளில் 23% நிறைந்துள்ளது. அதனால் உடலில் கொழுப்பு சேராமல் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். 

நீரழிவு பிரச்சினை இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்ப்பார்கள். ஆனால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

வறுத்த வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். அது அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுத்து வயிறு நிரம்பிய உணர்வையும் தரும்.
அவலில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது உங்களை சுறுசுறுப்பாக இருக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். 

சமைத்த போஹாவின் ஒரு கிண்ணத்தில் சுமார் 250 கலோரிகள் உள்ளன, இது உங்கள் மூளையை தடையின்றி செயல்பட ஊக்குவிக்கும். சரி இனி வேர்க்கடலை அவல் பயன்படுத்தி டேஸ்டியான மிக்ஸ்டு சாட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை:

அவல் – ஒரு கப், 

வேர்க்கடலை – அரை கப், 

பொட்டுக் கடலை – அரை கப்,

ஓட்ஸ் – அரை கப், 

உருளைக்கிழங்கு – 2, 

சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், 

எலுமிச்சம் பழம் – அரை மூடி, 

ஸ்வீட் சட்னி – தேவையான அளவு.

கிரீன் சட்னி – தேவையான அளவு.

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
டேஸ்டியான மிக்ஸ்டு சாட் செய்வது எப்படி?
அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, ஓட்ஸ் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, உதிர்க்கவும். 

இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, மேலே சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, ஸ்வீட் சட்னி, க்ரீன் சட்னி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
Tags: