சோளப் பாயாசம் செய்முறை / Corn pudding recipe !





சோளப் பாயாசம் செய்முறை / Corn pudding recipe !

இன்றைய அவசர உலகத்தில் சத்தான உணவென்று மிகவும் சத்து குறைந்த செயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட உணவையே உட் கொள்கிறோம்.
சோளப் பாயாசம்
ஆர்கானிக் முறையில் கிடைக்கும் சத்தான சிறு தானி யங்களில் செய்யக் கூடிய ருசீகர உணவை உண்டு ஆரோக்கிய மான வாழ்வை பெறலாம்.

தேவையான பொருட்கள் :

நாட்டுச் சோளம் - 2 கப் 

ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன் 

பார்லி - 2 டீஸ்பூன் 

கேசரி பவுடர் - சிறிதளவு 

பனை சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :

நாட்டுச் சோளம், பார்லி இரண்டையும் தனித் தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் நீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து பெரிய கண்ணுள்ள வடி கட்டியில் வடி கட்ட வேண்டும்.

அதில் உள்ள சக்கைகள் நீங்கியதும் அந்த கலவையில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

கேசரி பவுடர் சேர்த்து திரவ பதத்திற்கு வந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும். தேவை யெனில் தனியாக வாணலில் உளர் திராட்சை, முந்திரிப் பருப்பு போட்டு நெய்யில் தாளித்து கொட்டி பாயாசத்தை அருந்தலாம்.
Tags: