ருசியான தும்பிலி மீன் குழம்பு செய்வது எப்படி?





ருசியான தும்பிலி மீன் குழம்பு செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
ருசியான தும்பிலி மீன் குழம்பு செய்வது எப்படி?
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். 

கடலில் கிடைக்கும் எல்லா மீன்களையும் குழம்பு வைத்து சாப்பிட்டு, அடுத்து என்ன புதுசா சாப்பிடலாம்னு யோசிக்கிறவங்க கண்டிப்பா தும்பிலி மீன் குழம்பு ரெசிபி டிரை பண்ணுங்க.! 

வாங்க தும்பிலி மீன் குழம்பு எப்படி செய்யலானு தெரிஞ்சுக்கலாம். தும்பிலி மீன் சேர்த்த ருசியான உடன் குழம்பை சமைத்து ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.
தேவையான பொருட்கள் :

தும்பிலி மீன் – ஐந்து துண்டு

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

சீரகம் – கால் டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பில்லை – சிறிதளவு

புளி கரைச்சல் – கால் கப்

மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
விழுதாக அரைக்க:

வெங்காயம் – ஒன்று

தக்காளி – இரண்டு

பூண்டு – ஐந்து பால்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு

பச்சை மிளகாய் – இரண்டு

செய்முறை :

தும்பிலி மீன் குழம்பு
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.

புளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர், மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.
Tags: