சுவையான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?





சுவையான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?

பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 
மீன் புளி வறுவல்
தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. 
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சரி இனி மீன் பயன்படுத்தி சுவையான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?  என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருள்கள்:

மீன் - 7 அல்லது 8 துண்டுகள்

65 பொடி - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

புளித் தண்ணீர் - 3 தேக்கரண்டி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு தட்டில் 65 பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு கலந்து கொள்ளவும். அதனுடன் பூண்டு விழுது சேர்த்து பிசைந்து தேவைக்கேற்ப புளித் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

அதில் மீன் துண்டுகளை போட்டு முழுவதும் தடவி விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும். 

சுவையான மீன் புளி வறுவல் தயார்.
Tags: